Images
  • italy covid
    (படம்: REUTERS/Flavio Lo Scalzo)

COVID-19: இத்தாலியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 450க்கும் மேற்பட்டோர் மரணம்

இத்தாலியில் நேற்று 457 பேர் கொரோனா கிருமித்தொற்றால் மாண்டதாக அதன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 460 பேர் மாண்டதாகவும் தகவல் அளிக்கப்பட்டது.

நேற்று சுமார் 355,000 COVID-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை இத்தாலியில் 107,256 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

அந்நாட்டில் மொத்தம் 3.49 மில்லியன் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

-Reuters


 

Top