Images
  • Italy nightclub stampede (1)
    (படம்: Vigili del Fuoco/Handout via REUTERS)

இத்தாலி இரவு விடுதி நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

இத்தாலியின் Lanterna Azzurra இரவு விடுதியில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 6 பேர் மாண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

100க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் அவர்களில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

விடுதியில் சுமார் 1,000 பேர் இருந்தபோது,அங்கு யாரோ Pepper Spray எனப்படும் எரிச்சலூட்டும் தெளிப்பானைப் பயன்படுத்தியதால் அங்கு நெரிசல் ஏற்பட்டதாகச் சிலர் கூறினர்.

காயமுற்றவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சென்ற ஆண்டு, இத்தாலியின் டியூரின் நகரத்தில் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்து ஆட்டம் (Champions League) ஒளிபரப்பப்பட்டபோது பட்டாசு வெடித்ததில் 1,500 பேர் காயமடைந்தனர்.  

Top