Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையால் விளைந்த பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Johnson & Johnson

அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான Johnson & Johnson, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையால் விளைந்த பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையால் விளைந்த பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Johnson & Johnson

(படம்: REUTERS/Mike Segar/Illustration/File Photo)

அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான Johnson & Johnson, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையால் விளைந்த பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளது.

குழந்தைகளுக்கான டால்கம் (Talcum) வாசனைப் பவ்டரில் புற்றுநோயை ஏற்படுத்தும் Asbestos எனப்படும் கல்நார்த் துகள் கலந்திருப்பது, அந்த நிறுவனத்துக்குப் பல பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தெரியுமென ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டிருந்தது.

அதனையடுத்து, அதுபற்றிப் புலனாய்வு செய்யுமாறு மத்திய உணவு, மருந்து நிர்வாகத்துக்கு அமெரிக்க செனட்டர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

இருப்பினும் Johnson & Johnson நிறுவனம், தனது டால்கம் பவ்டரில் ஆபத்தான பொருள் கலந்திருப்பது தனக்குத் தெரியுமென்றோ, அந்தத் தகவலை வேண்டுமென்றே தான் மறைப்பதாகவோ கூறுவது பொய் என்று கூறியது.

அதுகுறித்துத் தான் ராய்ட்டர்ஸுக்கு வழங்கிய முக்கியத் தகவலை அது நீக்கியுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டது.

தனது தயாரிப்புப் பொருள்களில் உள்ள டால்க் (Talc) பாதுகாப்பானதே என்பதை அது மீண்டும் வலியுறுத்தியது.

அமெரிக்க அதிகாரிகளும் அனைத்துலக மருந்துச் சோதனை நிறுவனங்களும் அவ்வப்போது எழுப்பும் கேள்விகளுக்கு, தொடர்ந்து பதிலளித்து வந்திருப்பதாகவும் Johnson & Johnson நிறுவனம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்