Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: 15 மில்லியன் முறை போடக்கூடிய J&J தடுப்பூசிகள் தொழிற்சாலைத் தவற்றால் பாழாகிவிட்டதாக அறிக்கை

சுமார் 15 மில்லியன் முறை போடக்கூடிய Johnson & Johnson தடுப்பூசிகள், அமெரிக்காவின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தவற்றால் பாழாகிவிட்டதாக The New York Times தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

சுமார் 15 மில்லியன் முறை போடக்கூடிய Johnson & Johnson தடுப்பூசிகள், அமெரிக்காவின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தவற்றால் பாழாகிவிட்டதாக The New York Times தெரிவித்துள்ளது.

தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்தும் நிறுவனத்தின் முயற்சிகளை அது பாதித்துள்ளது.

Baltimore-இல் Emergent BioSolutions நடத்தும் ஆலையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசித் தொகுப்பு "தரநிலையைப் பூர்த்தி செய்யவில்லை" என்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பாதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.

பாதிக்கப்பட்ட தொகுப்பு, உற்பத்தி நிலையின் அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தரமும் பாதுகாப்பும் தொடர்ந்து நிறுவனத்தின் முன்னுரிமையாக உள்ளன என்று கூறப்பட்டது.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்