Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குட்டியை இழந்த தாய்த் திமிங்கிலத்தின் 17 நாள் துயர ஊர்வலம் முடிவுக்கு வந்தது

மாண்டுபோன குட்டியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு 17 நாட்கள் 1,600 கிலோமீட்டர் தூரம் கடந்துள்ளது ஒரு தாய் த்திமிங்கலம்.

வாசிப்புநேரம் -
குட்டியை இழந்த தாய்த் திமிங்கிலத்தின் 17 நாள் துயர ஊர்வலம் முடிவுக்கு வந்தது

(படம்: Ken Balcomb/ Center for Whale Research)

மாண்டுபோன குட்டியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு 17 நாட்கள் 1,600 கிலோமீட்டர் தூரம் கடந்துள்ளது ஒரு தாய் த்திமிங்கலம்.

கடந்த 17 நாட்களாக தனது குட்டியைப் பிரிய முடியாத துயரத்தில் அதனோடு நீந்தி வந்த திமிங்கிலம் இன்று (ஆகஸ்ட் 13) கனடாவின் அருகிலுள்ள ஹாரோ (Haro) நீரிணையில் தனியாக சால்மன் மீன்களைத் துரத்தியவாறு காணப்பட்டது.

இந்த வகைத் திமிங்கிலங்கள் பெரும்பாலும் இறந்த குட்டிகளை ஒரு வாரத்திற்குச் சுமந்து திரியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆனால், குறிப்பிட்ட இந்தத் திமிங்கிலம் புது சாதனை படைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

'J35' என்று அழைக்கப்படும் அந்தத் திமிங்கிலம் கடந்த சில நாட்களாக உலக கவனத்தை ஈர்த்து வந்தது.

அது இறந்த குட்டியைப் பிடித்துக்கொண்டு செல்வது முதலில் ஜூலை 24 அன்று கவனிக்கப்பட்டது.

அன்றுதான் குட்டி மாண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

பிறந்த அன்றே குட்டி மாண்டுபோயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

குட்டி இறந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை.

இப்பொழுது அதன் சடலம் கடலினுள் மூழ்கியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில், Killer whale வகைத் திமிங்கிலங்களுக்குப் பிறக்கும் குட்டிகளில் முக்கால்வாசி மாண்டுபோவதாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

கடலில் கொட்டப்படும் நச்சுப் பொருட்கள், கப்பல்களின் நடமாட்டம், போதிண உணவு இல்லாதது-ஆகியவையே அதற்கான முக்கியக் காரணங்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்