Images
  • Jack Ma
    (படம்: REUTERS/Lai Seng Sin) 

அலிபாபா தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜேக் மா

பிரபல இணைய விற்பனைத் தளமான அலிபாபாவின் நிறுவனரும், தலைவருமான திரு. ஜேக் மா, தலைமைப் பொறுப்பிலிருந்து நாளை அதிகாரபூர்வமாக விலகவிருக்கிறார்.

முன்னாள் ஆங்கில ஆசிரியரான திரு. மா, நாளை தமது 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார்.

துடிப்பு மிக்க அவர், வழக்கமான சீன நிர்வாகிகளை விட மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்தார்.

ஈராண்டுக்கு முன்னர் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் மைக்கேல் ஜாக்சன் பாணியில் நடனமிட்டது, குங்ஃபூ குறும்படத்தில் நடித்தது போன்றவை சில உதாரணங்கள்.

அலிபாபாவை விட்டு விலகியபின் தமது முதல் காதலான கல்வித் துறையில் மீண்டும் காலடி பதிக்கத் திட்டமிட்டுள்ளார் திரு. மா.

தமது அபிமானத்துக்குரிய புத்தாக்கத் தொழில்நுட்ப நிறுவனர் பில் கேட்ஸின் அடியொற்றி அவ்வாறு அவர் முடிவெடுத்துள்ளார்.

வழக்கமாக துடிப்பான நிறுவனர்கள் பதவி விலகியதும் பெரிய நிறுவனங்களின் பங்குவிலைகள் ஆட்டங்காணுவதுண்டு. ஆனால் அலிபாபாவில் நிலைமை அப்படியல்ல.

திரு. மா ஊக்குவித்த புத்தாக்க நடைமுறையைக் கொண்டு அது புதிய சகாப்தம் படைக்கும் என்று நம்பப்படுகிறது. 

Top