Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டேனியல் கிரேக்கின் சொகுசுக் கார் விற்பனை

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் டேனியல் கிரேக்கின் சொகுசுக் கார், ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
டேனியல் கிரேக்கின் சொகுசுக் கார் விற்பனை

(படம்: REUTERS/Fabrizio Bensch/File Photo)

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் டேனியல் கிரேக்கின் (Daniel Craig) ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) சொகுசுக் கார், சுமார் 470 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

வசதியற்ற இளையர்கள் வேலைவாய்ப்பை மேம்படுத்திக் கொள்ள உதவும் The Opportunity Network அறநிறுவனத்திற்கு அந்தத் தொகை முழுவதும் வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் நாணய மதிப்பில் அது 600ஆயிரம் வெள்ளிக்கும் அதிகம்.

அந்தச் சொகுசுக் காரின் வாகனப் பதிவெண் ஜேம்ஸ் பாண்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் 007 என்பது சிறப்பு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்