Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

3 நிமிடம் முன்னதாக மதிய உணவை உண்டதால் ஊழியருக்குச் சம்பள வெட்டு

தோக்கியோ: மதிய உணவை வாங்க மேசையைவிட்டு 3 நிமிடம் முன்னதாகச் சென்றதால் ஜப்பானிய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தச் செயலுக்காக அவர் கண்டிக்கப்பட்டார். 64 வயது அதிகாரி கோபே நகரில் குடிநீர் வாரியத்தில் பணிபுரிகிறார்.

வாசிப்புநேரம் -
3 நிமிடம் முன்னதாக மதிய உணவை உண்டதால் ஊழியருக்குச் சம்பள வெட்டு

(படம்: AP)

தோக்கியோ: மதிய உணவை வாங்க மேசையைவிட்டு 3 நிமிடம் முன்னதாகச் சென்றதால் ஜப்பானிய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தச் செயலுக்காக அவர் கண்டிக்கப்பட்டார். 64 வயது அதிகாரி கோபே நகரில் குடிநீர் வாரியத்தில் பணிபுரிகிறார்.

7 மாத காலக்கட்டத்தில் 26 முறை மதிய உணவுக்கு அவர் முன்கூட்டியே சென்றுள்ளார்.

மதியம் 12 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை மதிய உணவு நேரம். அவர் அதற்கு முன்னரே மதிய உணவைச் சாப்பிடக் கிளம்பிவிடுவார்.

தண்டனையாக அவருக்கு அரை நாள் சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலதிகாரிகளின் முன் அவர் மன்னிப்புக் கேட்கவும் நேரிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்