Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதிய அரசாங்கத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை தாருங்கள்: ஜோ பைடன் செனட்டுக்குக் கோரிக்கை

அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோ பைடன் (Joe Biden), தமது அரசாங்கத்தின் புதிய திட்டங்களை நிறைவேற்ற முன்னுரிமை தருமாறு செனட்டை வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோ பைடன் (Joe Biden), தமது அரசாங்கத்தின் புதிய திட்டங்களை நிறைவேற்ற முன்னுரிமை தருமாறு செனட்டை வலியுறுத்தியுள்ளார்.

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான இரண்டாவது அரசியல் குற்றச்சாட்டை செனட் விசாரிக்கவிருக்கும் நிலையில், அவர் அந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

புதிய அமைச்சரவைக்குத் தாம் தெரிவு செய்துள்ளவர்களை, செனட் விரைந்து அங்கீகரிக்க வேண்டுமெனத் திரு. பைடன் கேட்டுக்கொண்டார்.

அப்போதுதான், 20ஆம் தேதி தாம் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றதும், புதிய நிர்வாகம் தனது பணிகளைத் தொடங்கமுடியும் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்