Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜனநாயகம் குறித்த உச்சநிலைச் சந்திப்பில் தைவானுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் குறித்த உச்சநிலைச் சந்திப்பில் பங்கேற்கத் தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜனநாயகம் குறித்த உச்சநிலைச் சந்திப்பில் தைவானுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர்

கோப்புப் படம்: Reuters

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் குறித்த உச்சநிலைச் சந்திப்பில் பங்கேற்கத் தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த மாதம் 9,10 ஆம் தேதிகளில் காணொளி வழியே அந்தச் சந்திப்பு இடம்பெறும்.

சீனாவைத் தவிர சுமார் 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனின் அந்த நடவடிக்கை சீனாவுக்கு ஆத்திரமூட்டக்கூடும்.

தைவானைத் தனது நிர்வாகத்துக்குட்பட்ட வட்டாரமாக பெய்ச்சிங் கருதுகிறது.

தைவானுடனான உறவை வாஷிங்டன் வலுப்படுத்துவதன் தொடர்பில் சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) அமெரிக்க அதிபரிடம் எச்சரித்திருந்தார்.

ஜனநாயகத்தைத் தற்காக்கவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மனித உரிமையைப் பேணவும் தலைவர்களின் கடப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் உச்சநிலைச் சந்திப்பு அமையும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில், மனித உரிமை தொடர்பில் போலந்தின் நிலைப்பாடு சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் வேளையில், அந்நாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னிச்சையான செயல்பாடுகளுக்காக பிரேசில் அதிபர் ஜேர் பொல்சோனாரோ (Jair Bolsonaro) குறைகூறப்படுகிறார்.

ஆனால், உச்சநிலைச் சந்திப்பில் பங்கேற்க அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்