Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் பதிவியேற்பு நிகழ்வு ஒத்திகை தள்ளிவைப்பு

அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்புச் சடங்கின் ஒத்திகை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்புச் சடங்கின் ஒத்திகை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, அதிபர் பதவியேற்புச் சடங்கைக் காண நூறாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாஷிங்டனுக்குச் செல்வது வழக்கம். பெரும்பாலும் பெரிய அளவில் நடத்தப்பட்டு வரும் அச்சடங்கு இவ்வாண்டு கொரோனா நோய்ப்பரவலால் தளர்த்தப்பட்டு நடத்தப்படும் எனக் கூறப்பட்டது.

வாஷிண்டனில் ஆயுதம் ஏந்தியோர் தாக்குதல்களை நடத்தலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஆர்வலர் குழுக்கள் வன்முறைச் சம்பவங்கள் நிகழலாம் என்ற தத்தம் கவலைகளைத் தெரிவித்தனர்.

அதன் தொடர்பில் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோ பைடனின் வாஷிங்டன் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தலைநகர் முடக்கநிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக, தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் 20,000க்கும் அதிகமானோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்