Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சரியான முடிவுகளை எடுத்து, அமெரிக்க மக்களிடம் நேர்மையாக நடந்துகொள்வேன் -ஜோ பைடன்

கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கும் வேளையில், அடுத்த மாதம் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் கிருமிப்பரவல் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சரியான முடிவுகளை எடுத்து, அமெரிக்க மக்களிடம் நேர்மையாக நடந்துகொள்வேன் -ஜோ பைடன்

(கோப்புப் படம்: Reuters)

கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கும் வேளையில், அடுத்த மாதம் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் கிருமிப்பரவல் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் கிருமித்தொற்றால் சுமார் 9 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிபர் தேர்தலில் தாம் வெற்றிபெற்றாலும் கிருமித்தொற்றை முறியடிக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் திரு ஜோ பைடன் அது குறித்து தெரிவித்துள்ளார்.

அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சரியான முடிவுகளை எடுத்து, அமெரிக்க மக்களிடம் நேர்மையாக நடந்துகொள்ளவிருப்பதாகத் திரு.பைடன் சொன்னார்.

 அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்