Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குழந்தைகளுக்கான Johnson & Johnson பவுடரால் புற்றுநோய் ஏற்படுவது குறித்து குற்றவியல் விசாரணை

Johnson & Johnson குழந்தைகளுக்கான பவுடரால் (powder) புற்றுநோய் ஏற்படலாம் என்ற சாத்தியத்தைப் பற்றி நிறுவனம் பொய் கூறியதா என்பது குறித்து குற்றவியல் விசாரணை நடக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
குழந்தைகளுக்கான Johnson & Johnson பவுடரால் புற்றுநோய் ஏற்படுவது குறித்து குற்றவியல் விசாரணை

(படம்: REUTERS/Lucas Jackson/File Photo)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Johnson & Johnson குழந்தைகளுக்கான பவுடரால் (powder) புற்றுநோய் ஏற்படலாம் என்ற சாத்தியத்தைப் பற்றி நிறுவனம் பொய் கூறியதா என்பது குறித்து குற்றவியல் விசாரணை நடக்கவுள்ளது.

அதன் தொடர்பாக அமெரிக்க நீதிப் பிரிவு நடுவர் குழுவை அமைத்துள்ளதாக Bloomberg தெரிவித்துள்ளது.

உடலில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் இருக்கின்றனவா என்பது குறித்து Johnson & Johnson அதிகாரிகளுக்கு முன்பே தெரியுமா என்று நடுவர் குழு நிறுவனத்தின் ஆவணங்களில் தேடிவருகிறது.

விசாரணை தொடர்பில் அழைப்பாணைகளைப் பெற்றுள்ளதாக மட்டும் கூறிய Johnson & Johnson மேல் விவரங்கள் அளிக்கவில்லை.

விசாரணை குறித்துக் கருத்துத் தெரிவிக்க நிறுவனம் மறுத்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்