Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

33,000 பவுடர் டப்பாக்களை மீட்டுக்கொள்ளும் Johnson & Johnson

குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் பவுடர் வகையில் சுமார் 33,000 டப்பாக்களை மீட்டுக்கொள்வதாக Johnson & Johnson நிறுவனம் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
33,000 பவுடர் டப்பாக்களை மீட்டுக்கொள்ளும் Johnson & Johnson

(படம்: Reuters)

அமெரிக்கா : குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் பவுடர் வகையில் சுமார் 33,000 டப்பாக்களை மீட்டுக்கொள்வதாக Johnson & Johnson நிறுவனம் அறிவித்துள்ளது.

இணையம் வழி வாங்கிய பவுடர் டப்பா ஒன்றில், ஆஸ்பெஸ்டொஸ் (Asbestos) எனப்படும் கல்நாரிழைத் துகள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதற்குக் காரணம்.

அது, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட பவுடர் டப்பாக்களில் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Johnson & Johnson நிறுவனம் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் பவுடரில் கல்நாரிழைத் துகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்