Images
  • 'Just say no' to drug legalisation
    படம்: AFP/JEFF VINNICK

பொழுதுபோக்கிற்காக மரிஹுவானா போதைப்பொருளைச் சட்டபூர்வமாக்க அவசரப்பட வேண்டாம் - உலகச் சுகாதார அமைப்பு

கனடா, மரிஹுவானா போதைப்பொருளை பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துவதைச் சட்டபூர்வமாக்கும் தறுவாயில் உள்ளது.

இந்நிலையில், அவ்வாறு செய்யும் முன்னர், நாடுகள் இருமுறை சிந்திக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸில் நடைபெற்ற வட்டாரக் கூட்டத்தில் அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரிஸஸ் அவ்வாறு தெரிவித்தார்.

மருத்துவக் காரணங்களுக்காக மரிஹுவானா போன்ற போதைப்பொருட்களின் பயன்பாட்டை அமைப்பு ஆதரிப்பதாய் அவர் சொன்னார். இருப்பினும் அவற்றைப் பெறும் நடைமுறைகள் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

மரிஹுவானா போதைப்பொருளை முழுமையாகச் சட்டபூர்வமாக்குவது சுகாதார அபாயங்களை ஏற்படுத்தலாம் என்று அவர் எச்சரித்தார்.


Top