Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து உதவிக்கரம் நீட்டும் மைக் பென்ஸ்

அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence), நாட்டின் அடுத்த துணை அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள திருவாட்டி கமலா ஹாரிஸ் (Kamala Harris) பொறுப்பேற்பதற்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, உதவிக்கரமும் நீட்டியுள்ளார்.

வாசிப்புநேரம் -

புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள திரு. ஜோ பைடனும், திருவாட்டி ஹாரிஸும் இன்னும் சில நாள்களில் பொறுப்பேற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.

அதனை முன்னிட்டு, தொலைபேசி மூலம் திருவாட்டி ஹாரிஸைத் திரு பென்ஸ் தொடர்புகொண்டு பேசினார்.

தற்போது பொறுப்பில் இருக்கும் அரசாங்க நிர்வாகத்தினருக்கும், அடுத்து பொறுப்பேற்கவிருப்போருக்கும் இடையே நேர்ந்துள்ள முதல் சந்திப்பு இது.

இதற்கிடையே, அதிபர் டிரம்ப், திரு. பைடனை இதுவரை நேரடியாகத் தொடர்புகொள்ளவில்லை.

தேர்தலில் திரு பைடன் பெற்ற வெற்றியின் நம்பகத்தன்மை குறித்து, திரு டிரம்ப் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்