Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் 14 கங்காருக்களைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரு பதின்மவயதினர் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவில் 14 கங்காருக்களைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரு பதின்மவயதினர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் 14 கங்காருக்களைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரு பதின்மவயதினர் மீது குற்றச்சாட்டு

(படம்: AFP/MARCEL MOCHET)

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸில் 14 கங்காருக்களை வேண்டுமென்றே கொன்றதாக இரு பதின்மவயதினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சென்ற சனிக்கிழமை (9 அக்டோபர்) லாங் பீச்சில் (Long Beach) காலை 7 மணியளவில், அந்தக் கொடூரச் சம்பவம் நடந்ததாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், 5 பெரிய கங்காருக்களும் ஒரு குட்டியும் மாண்டுகிடப்பதைக் கண்டனர்.

மெலனீஸ் பீச் (Maloneys Beach) பகுதியில் மேலும் 7 பெரிய கங்காருக்களும் ஒரு குட்டியும் மாண்டது பின்னர் காவல்துறையினருக்குத் தெரியவந்தது.

ஒரு கங்காருக் குட்டி காயமடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து 17 வயது இளையர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்கள் கங்காருக்களைக் கொடூரமாக அடித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்