Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Karen என்னும் பெயருள்ள பெண்களுக்கு இலவச பீட்சா அளிக்கும் திட்டத்தைக் கைவிட்டது Domino's Pizza

Karen என்னும் பெயருள்ள பெண்களுக்கு, இலவச பீட்சா அளிக்கும் திட்டத்தை Domino's Pizza கைவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Karen என்னும் பெயருள்ள பெண்களுக்கு இலவச பீட்சா அளிக்கும் திட்டத்தைக் கைவிட்டது Domino's Pizza

(படம்: Pixabay)

Karen என்னும் பெயருள்ள பெண்களுக்கு, இலவச பீட்சா அளிக்கும் திட்டத்தை Domino's Pizza கைவிட்டுள்ளது.

இனவாத நோக்குடன் மற்றவர்களை அவமதிக்கும், நடுத்தரவயது வெள்ளையினப் பெண்களைக் குறிக்கும் பெயராக, Karen என்னும் பெயர் அண்மையில் அடையாளம் பெற்றது.

அந்தப் பெயரைக் கொண்டு, சமீபகாலத்தில் பல கேலிப் பதிவுகள் (memes) வெளியாகி வந்துள்ளன.

அது, Karen என்னும் பெயர்மீதே தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதாகக் கருதி அதை மாற்றத் திட்டமிட்டது Domino's Pizza நிறுவனம்.

அந்தப் பெயரிலுள்ள நல்லவர்களுக்குப் பரிசளித்து, அவர்களுக்கு உற்சாகமூட்ட விரும்பியது நிறுவனம்.

நியூசிலந்திலுள்ள Domino's Pizza நிறுவனம், Karen என்னும் பெயர் கொண்டவர்கள், தாங்கள் நல்லவர்கள் என்பதை வெளிப்படுத்தினால், இலவசமாகப் பீட்சாவைப் பெறலாம் என அறிவித்தது.

ஆனால், அது எதிர்பார்த்ததற்கு மாறான விளைவை வாடிக்கையாளர்களிடம் உருவாக்கியது.

"இலவச பீட்சா திட்டம் வெள்ளையினப் பெண்களின் இனவாதக் கருத்துகளை ஆதரிக்கிறது!"

"சமுதாயத்தில் இடம்பெறும் முக்கியப் பிரச்சினைகளை, அந்த இலவசப் பீட்சா திட்டம் பொருட்படுத்தவில்லை"

"இதற்குச் செலவிடும் பணத்தை வசதி குறைந்த எத்தனையோ பேருக்குத் தரலாமே"

என அதற்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்ததால் Domino's Pizza அந்தத் திட்டத்தைக் கைவிட்டது.

"நாங்கள் அனைவரையும் ஆதரிக்கும் சூழ்நிலையை உருவாக்க முயன்றோம். ஆனால் அது, தவறாகப் போய்விட்டது. எங்களை மன்னியுங்கள்" என்று மக்களிடம் அதன் Facebook பக்கத்தில் மன்னிப்புக் கேட்டது Domino's Pizza.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்