Images
  • kashoggi (1)
    (படம்: AFP/STR)

'என் தந்தையைக் கொன்றவர்களை என் குடும்பம் மன்னித்து விட்டது': கொலையுண்ட செய்தியாளர் கஷோகியின் மகன்

சவுதியைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்தவர்களை மன்னித்துவிட்டதாக, அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கொலையுண்ட திரு. கஷோகியின் குடும்பத்தார் சார்பில் அவரது மகன் அதனைத் தெரிவித்தார்.

தங்கள் தந்தையைக் கொலை செய்தவர்களை, புனித ரமதான் மாதத்தில், இறைவனின் உபதேசத்தை நினைவுகூர்ந்து மன்னிப்பதாக திரு. கஷோகியின் மகன்கள் குறிப்பிட்டனர்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியன்று திரு. கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்திற்குத் திருமணம் தொடர்பான ஆவணங்களைப் பெறச் சென்றிருந்தார்.

அங்கிருந்து காணாமற்போன திரு. கஷோகி, கொலையுண்டது பின்னர் தெரியவந்தது.
இதுவரை அவரது நல்லுடல் கிடைக்கவில்லை.

சவுதி அதிகாரிகள் திட்டமிட்டு அந்தக் கொலையைச் செய்ததை, சவுதி அரசாங்கம் முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டது. 

Top