Images
  • salman and trump
    (படம்:Kevin Lamarque/Reuters)

சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் தண்டிக்கப்படவேண்டும் : அமெரிக்க செனட்டர்கள்

சவுதி அரேபியச் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலைசெய்யப்பட்டதன் தொடர்பில் சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் அமெரிக்க செனட்டர்கள் மும்முரம் காட்டிவருகின்றனர்.

ரியாத்தைத் தண்டிக்கும் வகையில் அடுத்த வாரம் பல்வேறு நடிவடிக்கைளுக்கு வாக்களிக்கவிருப்பதாக அவர்கள் கூறினர்.

கஷோகி கொலைசெய்யப்பட்டதற்காக சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்த நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொலையின் தொடர்பில் அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறைத் தலைவர் ஜீனா ஹெஸ்பல் அளித்த விளக்கம் முகம்மது பின் சல்மான், கொலையின் பின்னணியில் இருந்திருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தியிருப்பதாகச் செனட்டர்கள் கூறினர். 

கொலையின் தொடர்பில் தீர்க்கமான ஆதாரங்கள் இல்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறும் வேளையில் செனட்டர்களின் முடிவு மாறுபட்டுள்ளது.


 

Top