Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'கஷோகியைக் கொலை செய்தவர்களை மன்னிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை'

'கஷோகியைக் கொலை செய்தவர்களை மன்னிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை'

வாசிப்புநேரம் -
'கஷோகியைக் கொலை செய்தவர்களை மன்னிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை'

(படம்:AFP/Mohammed Al-Shaikh)

சவுதி அரேபியச் செய்தியாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்தவர்களைத் தாங்கள் மன்னித்துவிட்டதாக அவரது மகன்கள் வெளியிட்ட அறிக்கையை, கஷோகியை மணம் புரியக் காத்திருந்த பெண் சாடியிருக்கிறார்.

துருக்கியைச் சேர்ந்த ஹேடிஸ் ஸென்கிஸ் (Hatice Cengiz) திரு. கஷோகியை மணம் புரியவிருந்தார்.

கஷோகியின் கொலை கொடூரமானது.
அந்த வழக்கில் நியாயம் கிடைக்கும்வரை, தாம் ஓயப் போவதில்லை என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

கொடுங் கொலையாளிகளை மன்னிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று அவர் கடுமையாகக் கூறினார்.

கஷோகியின் மகன் சாலா கஷோகி, ரமதான் மாதம் முடிவுறும் வேளையில், தந்தையைக் கொன்றவர்களைத் தாமும் தமது சகோதரர்களும் மன்னித்துவிட்டதாக டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

சவுதி அரேபிய அரச குடும்பத்துக்கு எதிரான செய்தி அறிக்கைகளை வெளியிட்டு வந்த ஜமால் கஷோகி, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார்.

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அவரைக் கொலை செய்யும்படி உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இருப்பினும், சவுதி அரேபிய அரசாங்கத் தரப்பு அதனை மறுத்தது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த 15 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு, 59 வயது கஷோகியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, கண்டந்துண்டமாக வெட்டி வீசியதாக துருக்கி அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

வேறு சில தரப்புகள், திரு. கஷோகியின் உடல் பாகங்கள் வீரியமிக்க ரசாயனத்தில் கரைக்கப்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் தெரிவித்திருந்தன.

இன்றுவரை அவரது நல்லுடலோ உடல் பாகங்களோ கிடைக்கவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்