Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'புலிட்சர்' பரிசை பெற்ற முதல் 'ராப்' பாணி இசைக் கலைஞர்

முதல் முறையாக 'ராப்' பாணி இசைக் கலைஞர் ஒருவர் இசைப் பிரிவில் அப்பரிசை வென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
'புலிட்சர்' பரிசை பெற்ற முதல் 'ராப்' பாணி இசைக் கலைஞர்

(படம்: Reuters)

'ஜாஸ்', பாரம்பரிய மேற்கத்திய பாணி இசைக் கலைஞர்களின் படைப்புகளுக்கு 'புலிட்சர்' பரிசுகளை வழங்கி அங்கீகரிப்பது வழக்கம்.

ஆனால், முதல் முறையாக 'ராப்' பாணி இசைக் கலைஞர் ஒருவர் இசைப் பிரிவில் அப்பரிசை வென்றுள்ளார்.

சிந்திக்க வைக்கும் பாடல்களை இயற்றியுள்ள கெண்டிரிக் லமார் என்ற 30 வயது இசைக் கலைஞருக்கு அந்தப் பெருமை கிடைத்திருக்கிறது.

இனம், காவல்துறையினர் வன்முறை, விடாமுயற்சி ஆகிய தலைப்புகளில் பாடல்களை அவர் எழுதி இளம் தலைமுறையினரிடம் பிரபலமாகத் திகழ்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்