Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கேரளாவில் திடீர் வெள்ளம்; 27 பேர் பலி

கடந்த 2 நாட்களாகத் தொடரும் மழையால் 24 நீர்த்தேக்கங்களின் அணைகளைத் திறந்துவிட்டுள்ளனர் அதிகாரிகள். அவற்றுள் ஒரு அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கேரளாவில் திடீர் வெள்ளம்; 27 பேர் பலி

(படம்:AFP)

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 27 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாகத் தொடரும் மழையால் 24 நீர்த்தேக்கங்களின் அணைகளைத் திறந்துவிட்டுள்ளனர் அதிகாரிகள்.

அவற்றுள் ஒரு அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது.

ராணுவம் மீட்புப் பணிகளுக்குக் கைகொடுத்துவருகிறது.

சுமார் 20,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

260 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னார் மலைப் பகுதியில் 24 வெளிநாட்டினர் உட்பட 57 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.

லாரிகளும் பயணிகளுக்கான வாகனங்களும் மலைப் பகுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டா என்று கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் கேரளா மாநிலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விடக் கடுமையான மழை பெய்துள்ளது.

இதுவரை இந்த ஆண்டு பொழிந்த மழையில் கேரளாவில் 70க்கும் அதிகமானோர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது, மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந்தன.


  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்