Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பர்கருடன் சேர்ந்து சாப்பிட தக்காளிச் சாறு சாஸ் இல்லை... அமெரிக்காவில் பற்றாக்குறை

அமெரிக்க உணவகங்களில், தக்காளிச் சாறு சாஸ் பொட்டலங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

வாசிப்புநேரம் -
பர்கருடன் சேர்ந்து சாப்பிட தக்காளிச் சாறு சாஸ் இல்லை... அமெரிக்காவில் பற்றாக்குறை

(கோப்புப் படம்: Pixabay)

அமெரிக்க உணவகங்களில், தக்காளிச் சாறு சாஸ் பொட்டலங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

அதுகுறித்து, BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

கிருமித்தொற்றுச் சூழலில், உணவு விநியோகத்திற்கும், பொட்டலமிட்ட உணவுச் சேவைகளுக்கும் தேவை கணிசமாய் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

அதற்கு ஏற்றவாறு, சாஸ் பொட்டலங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளதாக Heinz நிறுவனம் தெரிவித்தது.

சாஸ் பொட்டலங்களின் விநியோகத்தைக் காட்டிலும் அதன் தேவை அதிகமாக உள்ளது.

உணவுடன் முக்கியமாகப் பரிமாறப்படும் தக்காளிச் சாறு சாஸ் இல்லாததால், உணவகங்கள் மாற்று வழிகளைக் கண்டறியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், Heinz பொட்டலங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருவதாக BBC குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்