Images
  • Killed Children
    (படம்: TODAY )

அமெரிக்கா: 5 இளம் பிள்ளைகளைக் கொன்ற தந்தைக்கு மரணதண்டனை

அமெரிக்காவின் சௌத் கரோலைனா (South Carolina) மாநிலத்தில் தன்னுடைய 5 இளம் பிள்ளைகளைக் கொன்ற ஆடவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் 2014இல் நடந்தது.

ஒன்றிலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட தன்னுடைய இளம் பிள்ளைகளைக் கொன்று அவர்களுடைய சடலங்களை வெவ்வேறு மாநிலங்களில் வீசியிருக்கிறார் திமத்தி ஜோன்ஸ்.

6 வயது நேடான் தமது தாயைக் காண வேண்டுமென அழுததால், தண்டித்தபோது அவர் மாண்டுபோனார்.

அதனைத் தொடர்ந்து ஜோன்ஸ் தன்னுடைய எஞ்சிய நான்கு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றார்.

ஜோன்ஸின் மனநலம் குறித்து மனநல நிபுனர் இதற்குமுன் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

ஜோன்ஸ், தனக்குள்ளிருந்து எழுந்த ஒரு குரல் பிள்ளைகளைக் கொல்லச் சொன்னதாய்க் கூறியதாக நிபுணர் கூறினார்.

11 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கொலையுண்டிருப்பதால், குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்.

ஒரு வாரம் நீடித்த விசாரணையின் இறுதியில் ஜோன்ஸுக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என்று நடுவர் குழு ஒருமனதாக முடிவெடுத்தது.

 

Top