Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரியத் தலைவர் சீனாவுக்கு இரண்டு நாள் பயணம்

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
வடகொரியத் தலைவர் சீனாவுக்கு இரண்டு நாள் பயணம்

(படம்: REUTERS/Edgar Su/File Photo)

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.

சீன அரசாங்கத் தொலைக்காட்சி அந்தத் தகவலை வெளியிட்டது.

இருப்பினும் மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.

திரு. கிம், இந்த ஆண்டில் 3ஆவது முறையாகச் சீனா சென்றிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய மறுவாரம் அவரது சீனப் பயணம் இடம்பெற்றுள்ளது.

அந்த உச்சநிலைச் சந்திப்பின் முடிவு குறித்துச் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் கலந்தாலோசிக்கவே வடகொரியத் தலைவர் சீனா சென்றிருப்பதாக Nikkei நாளேடு கருத்துரைத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்