Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கொரியத் தீபகற்பத்தின் நிலையற்ற தன்மைக்கு அமெரிக்காவே மூலக் காரணம்: கிம் ஜோங் உன்

கொரியத் தீபகற்பத்தின் நிலையற்ற தன்மைக்கு அமெரிக்காவே  மூலக் காரணம் என்று வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

கொரியத் தீபகற்பத்தின் நிலையற்ற தன்மைக்கு அமெரிக்காவே மூலக் காரணம் என்று வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தற்காப்புக் கண்காட்சியில் அவர் அந்தக் கருத்துகளை முன்வைத்தாக, அந்நாட்டின் அரசாங்க ஊடகம் KCNA குறிப்பிட்டது.

வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு எந்தவிதப் பகைமை நோக்கமும் இல்லை என நம்புவது கடினமாக உள்ளதாகத் திரு. கிம் கூறினார்.

தீபகற்பத்தில் சமநிலையை அழிக்கும் வண்ணம் தென் கொரியாவின் ராணுவ மேம்பாடுகள் அமைந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

வட கொரியாவின் ஆணுவாயுத மேம்பாட்டுத் திட்டங்கள் தற்காப்பிற்காக மட்டுமே என்றும், அவை போர் தொடங்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்றும் திரு. கிம் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்