Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு - கையெழுத்தான ஆவணத்தில் விரிவான விவரங்களில்லை: ஆய்வாளர்கள்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு பிறகு, மிக முக்கியமான, விரிவான ஆவணத்தில் நேற்று கையெழுத்திட்டனர். 

வாசிப்புநேரம் -
டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு - கையெழுத்தான ஆவணத்தில் விரிவான விவரங்களில்லை: ஆய்வாளர்கள்

(படம்: CNA)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தாம் வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன்னை நம்புவதாகவும் 'உடனடியாக' திரு கிம் அணுவாயுத களைவை மேற்கொள்வார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஆனால், கையெழுத்தான ஆவணத்தில், விரிவான விவரங்களில்லை என்று ஆய்வாளர்கள் குறைகூறியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் செய்துகொள்ளப்பட்ட பன்முன்ஜோம் பிரகடனத்தின்படி, கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுதக் களைவுக்கு வட கொரியா கடப்பாடு
கொள்வதாகக் கூட்டு ஆவணம் குறிப்பிடுகிறது.

ஆனால், அதை எவ்வாறு உறுதிப்படுத்துவது, போன்ற விவரங்கள் இல்லை என்று கூறப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்