Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மலேசியாவின் கடன் பிரச்சினையைத் தீர்க்க தமது சம்பளத்தைக் குறைக்கும் மாமன்னர்

 அதற்குச் செலவிடப்படும் தொகை, வசதி குறைந்தவர்களுக்கு உதவ பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியாவின் கடன் பிரச்சினையைத் தீர்க்க தமது சம்பளத்தைக் குறைக்கும் மாமன்னர்

(படம்:Bernama)


கோலாலம்பூர்: மலேசியாவின் மாமன்னர் முகமது V, 2021இல் தமது ஆட்சிக்காலம் முடியும் வரை, 10 விழுக்காட்டுச் சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்.

மலேசியாவின் மோசமடைந்துள்ள கடன் பிரச்சினை, பொருளியல் நிலைமை குறித்து அவர் பெரிதும் கவலைப்படுவதாகக் கூறப்படுகிறது. தபுங் ஹரப்பான் (Tabung Harapan) எனும் நாட்டின் நிதிதிரட்டு முயற்சிக்கு உதவியுள்ள மலேசியர்களின் செயல்கள் தமது மனத்தைத் தொட்டுள்ளதாகக் கூறிய சுல்தான் மக்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் மாமன்னரின் அரண்மனையில் நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெறாது என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்குச் செலவிடப்படும் தொகை, வசதி குறைந்தவர்களுக்கு உதவ பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சியின் காரணமாக மலேசியா தற்போது ஒரு டிரில்லியன் ரிங்கிட் கடனில் இருப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கடந்த மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களின் சம்பளத்தை 10 விழுக்காடு குறைப்பதாக அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்