Images
  • Knife
    (படம்: Pixabay)

பொம்மைக் கத்தி என்று நினைத்து நண்பரை நிஜக் கத்தியால் குத்திய பெண்


அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாநிலத்தில் "பேய் வீட்டில்" (Haunted house) இருக்கும் பொம்மைக் கத்தி என்று நினைத்து ஒருவர் தமது நண்பரை உண்மையான கத்தியால் குத்திக் காயப்படுத்தியிருக்கிறார்.

29 வயது ஜேம்ஸ் யோக்கிமும் (James Yochim) அவரது நண்பர்களும் நேற்றிரவு (அக்டோபர் 13) பேய் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

அங்கு மண்டைஓட்டைப் போன்ற முக ஒப்பனையும் வைக்கோல் தொப்பியும் அணிந்த நபர் யோக்கிமையும் அவரது நண்பர்களையும் அணுகியிருக்கிறார்.

அருகிலிருக்கும் நண்பரைப் பிடிக்கவில்லை என்றால் அவரைக் குத்தச் சொல்லி அந்த நபர் கத்தி ஒன்றை யோக்கிமின் நண்பரிடம் கொடுத்திருக்கிறார்.

பேய் வீட்டில் நிறைய அட்டைக் கத்திகள் இருந்தன.

அவற்றுள் ஒன்றுதான் இந்தக் கத்தியும் என்று நினைத்து அதிகம் யோசிக்காமல் நண்பர் யோக்கிமைக் கத்தியால் குத்தியிருக்கிறார்.

அப்பொழுதுதான் அது உண்மையான கத்தி என்று தெரியவந்திருக்கிறது.

யோக்கிம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கையில் 9 தையல்களோடு யோக்கிம் தற்போது வீடு திரும்பியிருக்கிறார்.

கத்தியைக் கொடுத்த நபர் அந்தக் கத்தி உண்மையானது என்று தமக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

அவர் மீது புகார் கொடுக்கப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.

விசாரணை தொடர்கிறது.
 

Top