Images
  • koala bears 1

கோலாக்கள் ஆஸ்திரேலிய மாநிலத்தில் அழிந்துபோகும் அபாயம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோலாக்கள் 2050 ஆண்டுக்குள் அழிந்து போகலாம் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீச் சம்பவங்களில் சுமார் 5,000 கோலாக்கள் இறந்ததாக நம்பப்படுகிறது.


காட்டுத் தீச்சம்பவங்களில் சுமார் 5 மில்லியன் ஹெக்டர் காட்டுப்பகுதி எரிந்தது. அதில் சுமார் 24 விழுக்காட்டு கோலாக்களின் இருப்பிடங்கள் எரிந்தன.

கோலாக்கள் அழிந்துபோவதற்கு மனிதர்களின் நடவடிக்கை காரணம் என்று கூறப்படுகிறது. 


மேலும் வானிலை மாற்றங்கள் கோலாக்களின் உணவான
யூகலிப்டஸ் இலைகளின் தரத்தைக் குறைக்கின்றன.

தற்போது உள்ள சட்ட திட்டங்கள் கோலாக்களின் உயிர்களைப் பாதுகாக்கவில்லை எனக் கருதப்படுகிறது.

ஆய்வை நடத்திய குழு, சுமார் 42 பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டது. குறிப்பிட்ட இடங்களில் புதிய தேசியப் பூங்காக்களை அமைப்பது, காட்டுப்பகுதிகள் அழிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஆகியவை பரிந்துரைகளில் சில.


மாநில அரசாங்கம் ஆய்வையும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், எந்தெந்தப் பரிந்துரைகள் நடப்புக்குக் கொண்டுவரப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.

கோலாக்கள் ஆஸ்திரேலியாவின் தேசியச் சின்னமாகக் கருதப்படுபவை; அவற்றைப் பாதுகாப்பது முக்கியம் என்று மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் மெட் கீன் (Matt Kean) தெரிவித்தார்.


Top