Images
  • kobe
    படம்: REUTERS

கூடைப்பந்து நட்சத்திரம் கோபி பிராயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் மாண்டார்

ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் கோபி  பிராயன்ட், லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாண்டார்.

தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொருறுங்கி வெடித்துச் சிதறியது.

அந்தச் சம்பவத்தில் அவரும் அவருடன் பயணம் செய்த மகள் உட்பட 4 பயணிகளும் மாண்டனர்.

அந்த சம்பவம் அறிந்து, அங்கு விரைந்த அவசரகால மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டரில் மூண்ட தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், அவர்களால் பயணிகள் எவரையும் காப்பாற்ற இயலவில்லை.

திரு கோபி, தமது மனைவியையும் 3 மகள்களையும் விட்டுச் செல்கிறார். அவருக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம், கடைசி மகள் பிறந்தாள் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டன.   

Top