Images
  • la palma 3
    படம்: JORGE GUERRERO / AFP

ஸ்பெயின்: லா பாமா தீவில் எரிமலைக் குழம்பு அச்சம் காரணமாக 700க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ஸ்பெயினின் லா பாமா (La Palma) தீவில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தகையோர் வாழும் பகுதியை நோக்கி எரிமலைக் குழம்பு வழிந்துவருவதைத் தொடர்ந்து, அவ்வாறு உத்தரவிடப்பட்டது.

3 வாரத்துக்கு முன்னர் வெடித்த Cumbre Vieja எரிமலையைச் சுற்றிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலையை அதிகாரிகள் தளர்த்தியுள்ளனர்.

அதையடுத்து அங்கிருந்த 3,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறினர்.

அருகில் இருந்த சிமென்ட் (Cement) தொழிற்சாலை ஒன்றை எரிமலைக் குழம்பு மூடியது.

அதையடுத்து நச்சு வாயுவைச் சுவாசிப்பதைத் தவிர்க்க, கதவுகளையும் சன்னல்களையும் மூடிவிட்டு வீட்டுக்குள் இருக்கும்படி குடியிருப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

எனினும், அண்மை நிலவரப்படி காற்றின் தரம் மேம்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்பு கிட்டத்தட்ட 600 ஹெக்டர் பரப்பளவு நிலப்பகுதியைச் சேதப்படுத்தியது.

ஏறக்குறைய ஆயிரத்து 200 கட்டடங்கள் அழிந்துபோயின.  

Top