Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: குழாய் நீரில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரி கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் டெக்ஸஸ் (Texas)  மாநிலச் சுகாதார அதிகாரிகள், குழாய் நீரைப் பயன்படுத்தவேண்டாம் என்று Lake Jackson வட்டாரக் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: குழாய் நீரில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரி கண்டுபிடிப்பு

(படம்: Pixabay)

அமெரிக்காவின் டெக்ஸஸ் (Texas) மாநிலச் சுகாதார அதிகாரிகள், குழாய் நீரைப் பயன்படுத்தவேண்டாம் என்று Lake Jackson வட்டாரக் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர்.

குழாய் நீரில் மூளையை பாதிக்கக்கூடிய நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டதாய்ப் பொது நீர் விநியோகத் துறை கூறியது.

ஒற்றை உயிரணு கொண்ட அந்த நுண்ணுயிரியால் மரணம் ஏற்படக்கூடும்.

அரிதான அத்தகைய பாதிப்பால், அமெரிக்காவில 2009ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையே 34 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Lake Jackson வட்டார அதிகாரிகள் தண்ணீரைக் கிருமிநீக்கம் செய்வதில் முனைந்துள்ளனர். இருப்பினும் அதற்கு எவ்வளவு நாளாகும் என்று மதிப்பிடமுடியவில்லை என்று அவர்கள் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்