மகனுக்காக Lamborghini காரை முப்பரிமாணத் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கும் தந்தை
அமெரிக்கா: 'Forza Horizon' எனும் கணினி விளையாட்டை விளையாடிவிட்டு Lamborghini Aventador கார் வேண்டும் என்று மகன் கேட்டால் பொதுவாக தந்தை சிரித்துவிட்டுச் சென்றுவிடுவார்.
ஆனால் கொலராடோவில் வசிக்கும் 11 வயதுச் சிறுவன் Lamborghini Aventador வேண்டும் என்று கேட்டதும் மகனுடைய கனவை நனவாக்க முடிவெடுத்தார் ஸ்டெர்லிங் பெக்கஸ் (Sterling Backus).
புதிய Lamborghini Aventador காரை வாங்குவதற்குக் கிட்டத்தட்ட 511,955 வெள்ளி செலவாகும்.
ஆனால் 18,771 வெள்ளியில் வேலையை முடிக்க அந்த இயற்பியல் நிபுணர் எடுத்துக்கொண்ட உத்தி முப்பரிமாணத் தொழில்நுட்பம்.
BBC தகவல்படி, தொழிற்பேட்டைகளில் பயன்படுத்தப்படுவது போன்ற பெரிய அளவிலான முப்பரிமாண அச்சு பெக்கஸிடம் இல்லை.
ஆனால் Amazonஇல் வாங்கிய சாதாரண முப்பரிமாண அச்சுகள் மற்றும் YouTube காணொளிகளைக் கொண்டு காரைச் சிறு பாகங்களாக உருவாக்கி ஒன்று சேர்க்கிறார் பெக்கஸ்.
காரின் சில பாகங்களில் மாற்றம் உண்டு.
இருப்பினும் அசாதாரண முயற்சிதான்!