Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

LEGO-வைக் கொண்டு டைட்டானிக் கப்பலை உருவாக்கலாம், 9090 கட்டைகளுடன்...

Lego நிறுவனம் அதன் ஆகப் பெரிய விளையாட்டுக் கட்டைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

LEGO நிறுவனம் அதன் ஆகப் பெரிய விளையாட்டுக் கட்டைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

அதைக் கொண்டு உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் கப்பலின் மாதிரியை, உண்மையான அளவில் (scale model) வடிவமைக்க முடியும் என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மொத்தம் 9090 கட்டைகள்.

இறுதி வடிவம் 53 அங்குலத்துக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டிருக்கும்.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இங்கிலாந்தின் சௌதாம்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குப் புறப்பட்டது டைட்டானிக் கப்பல்.

நள்ளிரவுவாக்கில், நடுக்கடலில் மிதந்துகொண்டிருந்த பனிப்பாறையில் மோதிய கப்பல், 3 மணிநேரத்துக்குள் மூழ்கியது.

அந்த விபத்தில், சுமார் 1,500 பேர் மாண்டனர்.
706 பேர் உயிர் பிழைத்தனர்.

கப்பலை நேரடியாகக் கண்முன் கொண்டுவர விரும்பிய Lego நிறுவனம், அதை 3 பாகங்களாகப் பிரித்துள்ளது.

நிஜக் கப்பலின் அளவில் 200இல் ஒரு பங்கு என்ற அளவில், இந்த விளையாட்டு மாதிரிக் கப்பல் வடிவமைக்கப்படும்.

கப்பலின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் கட்டைகளைக் கொண்டு வடிவமைக்க விளையாட்டில் இடமுள்ளது.

LEGO பிரியர்களை, இது வெகுவாக ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.

நவம்பர் 1 முதல் கட்டைகளைப் பெற முன்பதிவு செய்யலாம் என்று CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

விலை- 629.00 டாலர் (852.70 வெள்ளி)  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்