Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆக நீண்ட இடைவிடா விமானச்சேவை இன்று தொடக்கம்

உலகின் ஆகநீண்ட இடைவிடா விமானச்சேவை இன்று தொடங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
உலகின் ஆக நீண்ட இடைவிடா விமானச்சேவை இன்று தொடக்கம்

(படம்: AFP/Daniel Slim)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

உலகின் ஆகநீண்ட இடைவிடா விமானச்சேவை இன்று தொடங்கவிருக்கிறது.

ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்டாஸ் விமானம் பறக்கவிருக்கிறது.

அது சுமார் 16,000 கிலோமீட்டர் தொலைவு, 19 மணிநேரம் தொடர்ந்து பறக்கக்கூடியது.

விமானத்தில் 40 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் இடம்பெற்றிருப்பர்.

விமானப்பயணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப் போதிய இடம் விமானத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர்  நீண்ட இடைவிடா விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வழங்கியது. 18 மணிநேரத்துக்குச் சுமார் 15,000 கிலோமீட்டர் அது கடந்துசென்றது.

சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் வரை அந்தச் சேவை அன்றாடம் வழங்கப்பட்டுவருகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்