Images
  • lava
    (கோப்புப் படம்: Pixabay)

அமெரிக்கா: பாறைக்குழம்புக் குழியில் விழுந்து ஆடவர் மரணம்

அமெரிக்கா: ஹவாயியில் (Hawaii) எரிமலைப் பாறைக்குழம்பினால் உருவான குழியில் விழுந்து ஆடவர் ஒருவர் மாண்டார்.

தன்னுடைய தோட்டத்திலுள்ள மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, அந்த 71 வயது ஆடவர் குழியில் விழுந்ததாக, BBC தெரிவித்தது.

எரிமலையிலிருந்து உருவாகும் பாறைக்குழம்பு மேற்பகுதியில் குளிர்ந்து கெட்டியாகும்போது கீழ்ப்புறத்தில் குழாயைப் போன்ற குழிகள் உருவாவதுண்டு.

கெட்டியாக இருந்த மேற்பகுதி இடிந்து சரிந்ததில், ஆடவர் 22 அடி ஆழமுள்ள குழிக்குள் விழுந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சில நாள்களாக அந்த ஆடவரைக் காணவில்லை என்பதால் அவரது நண்பர்கள் காவல்துறையிடம் புகார் செய்தபிறகு அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக BBC குறிப்பிட்டது.

ஆடவரின் சடலத்தை மீட்க தீயணைப்பு வீரர்கள் கயிற்றைக் கொண்டு குழியில் இறங்கவேண்டியிருந்தது.  

Top