Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லெபனான் வெடிப்புகளுக்குக் காரணம் யார் என்பதைக் கண்டுபிடிக்க 4 நாள் கெடு

லெபனான் வெடிப்புகளுக்குக் காரணம் யார் என்பதைக் கண்டுபிடிக்க 4 நாள் கெடு

வாசிப்புநேரம் -
லெபனான் வெடிப்புகளுக்குக் காரணம் யார் என்பதைக் கண்டுபிடிக்க 4 நாள் கெடு

படம்: AFP

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணம் யார் என்பதைக் கண்டுபிடிக்கப் புலனாய்வுக் குழுவுக்கு லெபனான் அரசாங்கம் 4 நாள் கெடு விதித்துள்ளது.

குழுவை அமைக்க இன்று காலை முடிவு செய்யப்பட்டதாக லெபனான் வெளியுறவு அமைச்சர் சார்பல் வெஹ்பே (Charbel Wehbe) தெரிவித்தார்.

வெடிப்பு சம்பவங்கள் எப்படி நேர்ந்தன, யார் காரணம் உள்ளிட்ட கேள்விகளுக்கு 4 நாள்களில் குழு பதில் தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குற்றத்துக்குக் காணரமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திரு. வெஹ்பே.

பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நேர்ந்த இரண்டு பெரிய வெடிப்புகளில் 137 பேர் மாண்டனர். மேலும் 5,000 பேர் காயமடைந்தனர்.

சம்பவத்தால் சுமார் 300,000 பேர் வீடுகளை இழந்து தற்காலிகத் தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

சேதத்தின் மதிப்பு 3 பில்லியன் டாலருக்கு மேல் என்று லெபனான் தெரிவித்தது.

2,750 டன்னுக்கும் அதிகமான Ammonium nitrate ரசாயனம் கிடங்கு ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அது தீப்பற்றியதால் வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது

வெடிப்புகளின் தொடர்பில் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்