Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Lego கட்டைகளைக் கொண்டு செயற்கைக் கை

ஸ்பானிய இளையர், டேவிட் அகுய்லர் (David Aguilar), Lego கட்டைகளைப் பயன்படுத்தி தமது செயற்கைக் கையை உருவாக்கியுள்ளார்.

வாசிப்புநேரம் -
Lego கட்டைகளைக் கொண்டு செயற்கைக் கை

படம்: REUTERS/Albert Gea

தன் கையே தனக்குதவி.....டேவிட் அகுய்லர் (David Aguilar) எனும் ஸ்பானிய இளையருக்கு இது முற்றிலும் பொருந்தும்.

இவர் Lego கட்டைகளைப் பயன்படுத்தித் தமது செயற்கைக் கையை உருவாக்கியுள்ளார்.

அரியவகை மரபணுக் குறைபாடு காரணமாக வலது முழங்கை இல்லாமல் அவர் பிறந்தார்.

19 வயது அகுய்லர் பல்கலைக்கழகத்தில் உயிர்ப் பொறியியல் துறையில் படித்து வருகிறார்.

அவர் வண்ணமிகு செயற்கை கையைப் பயன்படுத்தி வருகிறார். சிறு வயதிலிருந்து, Lego கட்டைகளின்மீது அவருக்கு நாட்டம் அதிகம்.

தமது 9ஆம் வயதில் எளிய செயற்கைக் கையை அவர் உருவாக்கினார். அடுத்தடுத்து அவர் உருவாக்கிய செயற்கைக் கை, மேம்பட்ட செயல் திறனைக் கொண்டிருந்தது.

இன்னும் அதிகமாக அசையும் ஆற்றலை அது கொண்டிருந்தது.

தேவையுள்ளோருக்கு, கட்டுப்படியான விலையில் செயற்கைக் கைகளை உருவாக்கி வழங்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்