Images
  • Leicester Lockdown

Covid-19: பிரிட்டனின் லெஸ்டர் நகரில் முடக்கநிலை

பிரிட்டனின் லெஸ்டர் நகரில் முடக்கநிலை அறிவிக்கப்படக்கூடும்.

COVID-19 நோய்ப்பரவல் அதிகரித்துவருவதால் அரசாங்கம் அத்தகைய முடிவை எடுக்கக்கூடும் என்று British Sunday Times நாளேடு தெரிவித்தது.

லெஸ்டர் நகரில் கிட்டத்தட்ட 350,000 பேர் வாழ்கின்றனர்.

இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் அங்கு 650 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

பிரிட்டன் சுகாதார அமைச்சர் மாட் ஹேன்காக் (Matt Hancock), கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த சட்டபூர்வ நடவடிக்கையை ஆராய்ந்து வருகிறார்.

முழுமையான முடக்கத்தை அறிவிப்பது உட்பட இதர நடைமுறைகள் குறித்தும் அவர் யோசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிருமித்தொற்று நிலவரம் பற்றி திரு. ஹேன்காக் கவலைப்படுவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறியது.

Top