Images
  • Lemon
    (படம்: Mike Sakasegawa/ Twitter) 

இணையவாசிகளுக்கு நம்பிக்கையளித்த எலுமிச்சம்பழம்

தளராமல், திடமாக ஓடியதற்குப் பாராட்டுப் பெற்றுள்ளது... ஓர் எலுமிச்சம்பழம்.

சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அந்த எலுமிச்சம்பழம் நிற்காமல் உருண்டோடியது.

சில நேரங்களில் அது நின்றுவிடுவதைப் போல் தோன்றியது... ஆனால் நிற்கவில்லை.

எலுமிச்சம்பழம் நின்றுவிடுமோ என்ற பதைபதைப்பு சிலருக்கு.

அது எவ்வளவு தூரம் பயணம் செய்யும் என்ற கேள்வியோடு பலரும் அதை இணையத்தில் பின்தொடர்ந்தனர்.

இணையவாசிகளுக்கு உடனுக்குடன் தகவல் தந்தார் மைக் சகசிகாவா (Mike Sakasegawa).


சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது எலுமிச்சம்பழம் உருண்டு செல்வதை மைக் கண்டார்.

மைக் அதைத் தொடவோ, தள்ளவோ இல்லை. ஆனால் பழம் எவ்வளவு தூரம் தானாகவே உருண்டு செல்கிறது என்பதைப் பார்க்க அவருக்கு ஆர்வம்.


எலுமிச்சம்பழம் நின்றதும் காணொளியை அவர் தமது Twitter பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

24 மணி நேரத்தில் காணொளியை 2.5 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர்.

36,000 பேர் அதை மீண்டும் பகிர்ந்துள்ளனர்.

எலுமிச்சம்பழம் ஏன் பிரபலமானது?

அது உருண்டு செல்வது மனதிற்கு விவரிக்கமுடியாத ஒருவித இன்பத்தைத் தந்ததாக சிலர் கூறினர்.

எலுமிச்சம்பழம் அயராது தொடர்ந்து உருண்டு செல்வதாகக் கூறிய சிலர் அது அவர்களுக்கு நம்பிக்கையளித்ததாகக் கூட கூறினர்.


அடுத்து எலுமிச்சம்பழம், சிறார் புத்தக நாயகன் ஆகலாம்!

எலுமிச்சம்பழம் செய்த 1 கிலோமீட்டர் பயணத்தைச் சிறுவர்களுக்கான கதையாக வடிவமைக்க விரும்பிய ஒருவர் மைக்கிடம் அதைப் பற்றிப் பேசியுள்ளார்.

இப்பொழுது எலுமிச்சம்பழம் எங்கிருக்கிறது?

பலர் அதை எலுமிச்சஞ்சாறாக பிழியச் சொல்லியிருந்தாலும் அதைப் பத்திரமாகவே வைத்திருக்கிறார் மைக்.

 

உங்கள் கருத்து

Top