Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பத்தாண்டுக்கு மேலாக பல்லாயிரம் கடிதங்களை விநியோகம் செய்யத் தவறிய இந்திய அஞ்சல்காரர்

பத்தாண்டுக்கு மேலாக பல்லாயிரம் கடிதங்களை விநியோகம் செய்யத் தவறிய இந்திய அஞ்சல்காரர் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
பத்தாண்டுக்கு மேலாக பல்லாயிரம் கடிதங்களை விநியோகம் செய்யத் தவறிய இந்திய அஞ்சல்காரர்

(படம்: AP)

பத்தாண்டுக்கு மேலாக பல்லாயிரம் கடிதங்களை விநியோகம் செய்யத் தவறிய இந்திய அஞ்சல்காரர் ஒருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் பழைய கடிதங்களை பாழடைந்த முன்னாள் அஞ்சல் நிலையத்தில் கண்டுபிடித்தனர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் சிலர்.

கடிதங்கள் நிரம்பிய பைகளை அவர்கள் திறந்தபோது அவற்றில் தானியக்க வங்கி அட்டைகளும், வங்கிக் கணக்குப் புத்தகங்களும் இருந்தன. பைகளில் சுமார் 6,000 கடிதங்களும் பொட்டலங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.

சுமார் 1,500 கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளான.

சோம்பேறி அஞ்சல்காரர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுள்ளார்.

அவசரமாக விநியோகம் செய்ய வேண்டிய அஞ்சலைச் சரியாகக் கொடுத்துவிட்டு மற்றவற்றை தூக்கிப் போட்டுவிடுவார்.

அஞ்சல்காரர் ஏன் அவ்வாறு செய்தார் என்று தெளிவாகத் தெரியவில்லை. இவ்வளவு காலமாக யாரும் ஏன் புகார் கொடுக்கவில்லை என விசாரணையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்