Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில் கண்ணைப் பறிக்கும் தொலைக்காட்சிப் படைப்பு

இந்த ஆண்டின் பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில் கார்களிலிருந்து கழிப்பறைகள் வரை அதிநவீன தொழில்நுட்பத்தில் பல பொருள்கள் அறிமுகம் கண்டுள்ளன.

வாசிப்புநேரம் -
பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில் கண்ணைப் பறிக்கும் தொலைக்காட்சிப் படைப்பு

(படம்: AFP / Robyn Beck)

இந்த ஆண்டின் பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில் கார்களிலிருந்து கழிப்பறைகள் வரை அதிநவீன தொழில்நுட்பத்தில் பல பொருள்கள் அறிமுகம் கண்டுள்ளன.

ஆனால், கண்காட்சியின் இறுதி நாளில் LG நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பு, பார்வையாளர்களைக் கவர்ந்தன.

"Massive Curve of Nature" என்ற அந்தப் படைப்பில் 250 தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டன.

அவை சாதாரணமானவை அல்ல... 4K எனும் மிகத் தெளிவான படங்களை ஒளிபரப்பும் வளைவான OLED தொலைக்காட்சிகள்!

அவற்றில் நீர்வீழ்ச்சி, மேகங்கள், மரங்கள் போன்ற இயற்கைக் காட்சிகள் திரையிடப்பட்டன.

கண்காட்சியில் இடம்பெற்ற அந்த அற்புதப் படைப்பு இதோ...

(படம்: AFP / Robyn Beck)
(படம்: AFP / Robyn Beck)

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நேற்று கண்காட்சி நிறைவடைந்தது. அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி மீண்டும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்