Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லிபியாவில் முதல் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவம் உறுதி

லிபியாவில் முதன்முறை COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
லிபியாவில் முதல் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவம் உறுதி

(படம்: AFP)

லிபியாவில் முதன்முறை COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அது குறித்து அந்நாட்டின் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் வேறெந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

பாதிப்புக்கு ஆளானவர் டிரிபொலியில் உள்ள மருத்துமவனையில் சிகிச்சை பெறுவதாக மருத்துவர்கள் கூறினர்.

லிபியாவில் இரண்டு ஆட்சி நிர்வாகம் நடக்கிறது.

அனைத்துலக அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் டிரிபொலி உள்ளிட்ட மேற்குப் பகுதியை நிர்வாகம் செய்கிறது.

பெங்காஸி ள்ளிட்ட கிழக்குப் பகுதியை எதிர்த்தரப்பு நிர்வாகம் செய்கிறது.

அவ்விரண்டும், நாட்டில் முடக்கத்தை அறிவித்துள்ளன.

வெளிநாட்டவரின் வருகைக்குத் தடை விதித்துள்ளன.

நாட்டின் சுகாதாரச் சேவைக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவை உறுதியளித்துள்ளன.

லிபியாவில் மருத்துவப் பரிசோதனைக் கருவிகளும், பாதுகாப்புச் சாதனங்களும் போதுமான அளவில் இல்லை.

குறிப்பாக, கிராமப்புறங்களில் மருத்துவ ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பல்லாண்டாய்த் தொடரும் வன்முறையால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருமிப் பரவல் லிபியாவின் நிலைமையை மோசமாக்கிவிடுமோ என்ற கவலை எழுந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்