Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மூச்சுக்காற்று இல்லாத சுக்கிரனில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள்

மூச்சுக்காற்று இல்லாத சுக்கிரனில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள்

வாசிப்புநேரம் -

சுக்கிரனில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நச்சுவாயு கொண்ட கிரகத்தில் phosphine எனும் வாயு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதில் நுண்ணுயிர்கள் வாழக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.

பூமியில் சுவாசவாயு இல்லாத சூழலில் வாழும் நுண்ணுயிர்கள் phosphine வாயுவை வெளியிடுகின்றன.

மற்ற கோள்களில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சிகள் முயன்று வருகின்றன.

phosphine வாயு இருப்பதால் மட்டுமே சுக்கிரனில் உயிர் இருப்பதாக முடிவுக்கு வர முடியாது என்று சில ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

சுக்கிரனில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் மற்ற கிரகங்களிலும் உயிர் வாழ்வதற்கான சூழல்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கை எழுவதாய் வேறு சிலர் கூறுகின்றனர்.

பூமிக்கு அருகில் இருக்கும் சுக்கிரன் நச்சுவாயு மிகுந்தது. அதன் வெப்பநிலை 471 டிகிரி செல்சியஸ் வரை எட்டும் என்று கூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்