Images
  • jail
    (படம்: AP)

மாண்டாலும் ஆயுள்தண்டனை தொடரவேண்டுமா?

"மருத்துவரீதியாக மாண்டுவிட்டேன்..இனி நான் ஏன் ஆயுள் தண்டனையைத் தொடரவேண்டும்?" என்ற கைதி ஒருவரின் கேள்வி அமெரிக்காவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெஞ்சமின் ஷுரேபர் (Benjamin Schreiber) என்பவருக்கு 1997இல் கொலை குற்றம் தொடர்பாக 'முன்கூட்டியே விடுதலை செய்யச் சாத்தியமில்லாத' ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் 18 ஆண்டுகள் அயோவா (Iowa) சிறையில் அடைக்கப்பட்டார்.

CNN தகவல்படி, 2015இல் சிறுநீரகப் பிரச்சினையால் ஷுரேபர் சிறையில் மயங்கிக் கிடந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் ஐந்து முறை உயிர்ப்பித்தார்கள்.

தற்போது, மருத்துவரீதியாக தான் மாண்டுவிட்டதாகக் கூறுகிறார் ஷுரேபர்.

இதனால் தன்னுடைய ஆயுள்தண்டனை முடிந்துவிட்டதாகவும் தான் உடனே சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஷுரேபர் வழக்குத்தொடுத்துள்ளார்.

ஷுரேபரின் வழக்கு அயோவா நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டது.

அதற்கு எதிராக மேல்முறையீடு செய்தார் ஷுரேபர்.

இம்முறையும் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இனி ஷுரேபர் தம்முடைய வழக்கை உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்வாரா என்பது குறித்துத் தகவல் இல்லை.  

Top