Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானத்திற்கு அருகே மின்னல் தாக்குதல்

நியூசிலந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில், புறப்படக் காத்துக்கொண்டிருந்த விமானம் அருகே மின்னல் தாக்கியது.

வாசிப்புநேரம் -

நியூசிலந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில், புறப்படக் காத்துக்கொண்டிருந்த விமானம் அருகே மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கும் அந்தப் படத்தை வெளிப்புறத்தில் இருந்து ஒருவர் படமெடுத்தார்.

பிற்பகல் 3:30 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தின் அருகே மின்னல் தாக்கியது.

விமானம் புறப்படத் தயாராகும்போது மின்னல் தாக்கியதாகவும், அதைக் கண்டு தாம் மிரண்டு போனதாகவும் படத்தை எடுத்தவர் கூறினார்.

அவர், Garden City Helicopters நிறுவனத்தைச் சேர்ந்த விமானி.

அவர் எடுத்த படம் தற்போது இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது நியூசிலந்தில் கடுமையான புயல் வீசி வருகிறது.

சில இடங்களில் முட்டை அளவுள்ள ஆலங்கட்டி மழை பெய்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

நேற்று இரண்டு மணி நேர இடைவெளியில் சுமார் 700 மின்னல்கள் அந்த வட்டாரத்தைத் தாக்கியதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்