Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவில் மின்னல் தாக்கி 27 பேர் மரணம்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மின்னல் தாக்கி 27 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் மின்னல் தாக்கி 27 பேர் மரணம்

(படம்: Pixabay)

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மின்னல் தாக்கி 27 பேர் மாண்டனர்.

மேலும், பயணிகள் விமானம் ஒன்று காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதில் விமானப் பயணிகள் 8 பேர் காயமுற்றனர்.

இந்தியாவில், ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம்வரை நீடிக்கும் பருவமழைக்காலத்தில் மின்னல் தாக்கும் சம்பவங்கள் ஏற்படுவதுண்டு.

நேற்று, மேற்கு வங்காளத்தில் பெய்த கடும் மழையில் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அப்போது, வயல்களில் பணிபுரிந்துகொண்டிருந்த விவசாயிகள் சிலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மும்பையிலிருந்து கொல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று, தரையிறங்குமுன் கனத்த மழையில் சிக்கிக்கொண்டதாக, அதிகாரிகள் கூறினர்.

அப்போது காயமடைந்த 8 பயணிகளில் நால்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மின்னல் தாக்கி மாண்டோரின் குடும்பத்தாருக்கும் காயமுற்றோருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

-AFP/kg 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்