Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Lion Air விமான விபத்து : அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இந்தோனேசியாவுக்கு மாற்றப்படுமா?

இந்தோனேசியாவில் Lion Air விமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவடையவிருக்கும் வேளையில், போயிங் விமான நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தோனேசிய நீதிமன்றத்துக்கு மாற்றப்படலாம் என்று கருதப்படுகிறது.

வாசிப்புநேரம் -
Lion Air விமான விபத்து : அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இந்தோனேசியாவுக்கு மாற்றப்படுமா?

(படம்: AFP/Adek Berry)

இந்தோனேசியாவில் Lion Air விமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவடையவிருக்கும் வேளையில், போயிங் விமான நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தோனேசிய நீதிமன்றத்துக்கு மாற்றப்படலாம் என்று கருதப்படுகிறது.

வழக்கு விசாரணையை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்போவதாக அமெரிக்க நீதிபதி ஒருவர் கோடிகாட்டியுள்ளார்.

சென்ற ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி ஜக்கர்த்தா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து Pangkal Pinangற்குக் கிளம்பிய போயிங் 737 MAX 8 ரக விமானம் 13 நிமிடத்தில் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது. 

விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் அதில் மாண்டனர்.

பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் வழக்கு விசாரணை அமெரிக்காவில் நடைபெறவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனம் அமெரிக்காவில் இருப்பதை அவை சுட்டின.

ஆனால் போயிங் நிறுவனம் இந்தோனேசியாவில் வழக்கு விசாரிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்